வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Vinothkumar
Last Modified: புதன், 10 ஜூலை 2024 (16:24 IST)

சம்பள விஷயத்தில் கறார் காட்டிய கம்பீர்… அதனால்தான் அறிவிப்பு வர தாமதம் ஆனதா?

Ghambir
டிராவிட்டுக்குப் பிறகு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.



இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதையடுத்து கடந்த சில மாதங்களாகவே அவர்தான் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் என்ற ஊகங்கள் எழுந்தன.

ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஆகிக்கொண்டே வந்தது. ஏன் அந்த தாமதம் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்ற ராகுல் டிராவிட்டுக்கு ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் பிசிசிஐ ஊதியமாகக் கொடுத்தது.

ஆனால் கம்பீர் அதைவிட அதிகமான சம்பளம் தனக்கு கொடுக்கப்படவேண்டும் என பிடிவாதமாக இருந்தாராம். அது சம்மந்தமான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராதததால் தான் அறிவிப்பு வர தாமதம் ஆனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கம்பீருக்கு எவ்வளவு சம்பளம் உறுதி செய்யப்பட்டிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.