Daily Horoscope

எங்கள் அணிக்கும் மும்பைக்கும் ஒரே வித்தியாசம்தான்… ஆர் சி பி கேப்டன் டு பிளசிஸ் கருத்து!

Written By vinoth
Updated: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (10:52 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்கள் ஆக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதையடுத்து பேட் செய்த ஆர் சி பி அணியில் பாஃப் டு பிளசீஸ், ரஜத்படிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் அந்த அணி 196 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆர் சி பி பவுலர்களை கொஞ்சம் கூட மதிக்காமல் அடி வெளுத்து வாங்கியது. அந்த அணியின் இஷான் கிஷான் 34 பந்துகளில் 69 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்களும் சேர்த்து ஆட்டத்தை மிகவும் எளிதாக்கினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஆவது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய ஆர் சி பி கேப்டன் பாப் டு பிளசீஸ் “ நாங்கள் இந்த போட்டியில் செய்த தவறுகளில் ஒன்று டாஸை இழந்தது. இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என தெரிந்ததால் 250 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. நானும் பட்டிதாரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த போது பும்ரா மூலமாக மும்பை கம்பேக் கொடுத்தது. அவர்தான் எங்களுக்கும் மும்பை அணிக்கும் இடையிலான வித்தியாசம். அவர் எங்கள் அணியில் அவர் இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments