திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 1 மே 2024 (07:44 IST)

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன.

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முதலாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும். இதற்கான 15 பேர் கொண்ட அணியை அனைத்து அணிகளும் அறிவித்துவிட்டன.

இந்நிலையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் இருந்து நாடு திரும்ப வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் ஐபிஎல் லீக் போட்டிகளில் மட்டுமே இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவார்கள். அவர்கள் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாட மாட்டார்கள் என்பது ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.