வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

டி 20 உலகக் கோப்பை தொடர்… இந்திய அணி பயண தேதி இதுதான்!

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன.

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முதலாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும். இதற்கான 15 பேர் கொண்ட அணியை இன்னும் இரு தினங்களுக்குள் 20 அணிகளும் ஐசிசிக்கு அறிவிக்கவேண்டும். இப்போது நியுசிலாந்து தங்கள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்திய அணி மே 21 ஆம் தேதி இந்த தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  ஐபிஎல் தொடரில் விளையாடாத வீரர்கள் அதற்கு முன்பே கிளம்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.