இந்தியா பாகிஸ்தான் போட்டியால் பல மடங்கு உயர்ந்த ஹோட்டல் அறைகளின் வாடகை!
இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் நடக்க உள்ள இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இந்த போட்டிதான் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொடராக அமைந்துள்ளது. இந்த போட்டியைக் காண உலகின் பல இடங்களில் இருந்தும் ரசிகர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியால் அகமதாபாத் நகரில் போட்டி நடக்கும் நாளன்று ஹோட்டல்களில் அறை வாடகை உச்சத்தைத் தொட்டுள்ளது.
போட்டி நாளன்று நட்சத்திர ஹோட்டல்களில் 15ஆயிரம் ரூபாயாக இருந்த அறைகளின் வாடகை 1லட்சம் ரூபாய் வரை சென்றுள்ளதாகவும், 7000 ரூபாயாக இருந்த அறை வாடகை 70000 ரூபாய் வரையும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.