1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 29 ஜூன் 2023 (07:39 IST)

2011 உலகக் கோப்பையில் யுவ்ராஜ் செய்ததை இந்த முறை இவர் செய்வார்… ஸ்ரீகாந்த் நம்பும் சிஎஸ்கே வீரர்!

இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை நேற்று முன் தினம் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் நடக்க உள்ள இந்த தொடருக்கு இன்னும் 99 நாட்கள் மீதமுள்ளன.

இந்நிலையில் இந்திய அணி குறித்த பல விமர்சனங்கள், கருத்துகள் பல முன்னாள் வீரர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்ற ஸ்ரீகாந்த் ஜடேஜாவை தான் பெரிதும் நம்புவதாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் யுவ்ராஜ் சிங் அணிக்காக என்ன செய்தாரோ, அதை இந்த ஆண்டு உலகக் கோப்பையில் ஆல்ரவுண்டர் ஜடேஜா செய்வார் என நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கி தொடர் நாயகன் விருதை யுவ்ராஜ் சிங் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.