திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 23 ஜூலை 2022 (10:23 IST)

‘50 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடுவேனா?’ - தினேஷ் கார்த்திக்கு பிசிசிஐ போட்ட கண்டீஷன்!

இந்திய அணியின் டி 20 போட்டிகளில் சிறந்த பினிஷராக சமீப காலமாக செயல்பட்டு வருகிறார் தினேஷ் கார்த்திக்.

இந்திய அணிக்காக கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். ஆனால் தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்பு கிடைதததில்லை. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு தற்போது டி 20 அணியில் அவர் ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தற்போது இந்திய டி 20 அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவர் அணியில் சேர்க்கப்படுவதில்லை.

இந்நிலையில் தற்போது TNPL தொடரில் விளையாடி வரும் அவர் 29 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாட செல்ல உள்ளார். இப்போது அவரிடம் “டி 20 உலகக்கோப்பை போல அடுத்த ஆண்டு நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவீர்களா?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கார்த்தி “மீண்டும் வெஸ்ட் இண்டீஸுக்கு செல்லும் வரையில் இந்திய கிரிக்கெட் குறித்து எதுவும் பேசக் கூடாது என பிசிசிஐ நிபந்தனை விதித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.