வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 23 ஜூலை 2022 (22:52 IST)

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகும் ‘வாடிவாசல்’ அப்டேட்!

வாடிவாசல் திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விரைவில் இந்த படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது பாலா இயக்கும் படம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் படம் ஆகியவற்றில் சுர்யா கவனம் செலுத்தி வருகிறார். வெற்றிமாறனும் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் ‘வாடிவாசல்’ திரைப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ‘வாடிவாசல்’ படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ட்வீட் செய்துள்ளார்.

அதில் ’தேசிய விருது வென்ற @Suriya_offl அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தனது ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக #வாடிவாசல் படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் அவர் பயிற்சி பெற்றபோது எடுத்த காட்சிகள் வெளியிடுவதில் மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.