Daily Horoscope

’பீல்டிங் நிக்கும்போது என்ன கவனி… இல்லன்னா வெளிய போயிடு’ – இளம் வீரரிடம் கோபத்தைக் காட்டிய தோனி!

Written By vinoth
Updated: சனி, 20 ஏப்ரல் 2024 (07:40 IST)
ஐபிஎல் 2024 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சி எஸ் கே  அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் தோனி எட்டாவது வீரராக களமிறங்கிய அதிரடியாக விளையாடி வருகிறார். தற்போது 42 வயதாகும் தோனி இந்த சீசனின் வயதான கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சீசன் வரை கேப்டனாக செயல்பட்ட தோனி இந்த ஆண்டு வெறும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்படுகிறார். ஆனாலும் களத்தில் அவர் ஒரு கேப்டன் போலவே ஃபீல்ட் செட்டப் செய்கிறார். ருத்துராஜைப் போலவே வீரர்கள் அவரையும் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் சி எஸ் கே அணியில் தோனி தலைமையில் விளையாடிய நாராயண் ஜெகதீசன் தோனியைப் பற்றி ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “ஆர் சி பி அணிக்கு எதிரான ஒரு போட்டியில் நான் கோலி விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதனால் தோனி என்னை பீல்டிங் மாற சொன்னதை நான் கவனிக்கவில்லை. அதனால் கடுப்பான தோனி ஓவர் முடிந்த போது ”ஒழுங்கா என்ன கவனி… இல்லையா நீ வெளிய போயிடு” எனக் கூறினார்” என தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments