Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் இறங்கிய தோனி… குஷியான ரசிகர்கள்!

Written By vinoth
Updated: வெள்ளி, 20 ஜனவரி 2023 (12:26 IST)
சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியதை அடுத்து கடந்த ஆண்டு சி எஸ் கே அணியை இறுதி போட்டிகளில் தோனி வழிநடத்தினார். ஆனால் அப்போதும் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை.இதனால் ஜடேஜா அதிருப்தியில் இருந்ததாகவும், அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. மேலும் அவரது சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இந்த ஆண்டும் சி எஸ் கே அணிக்காகதான் விளையாட உள்ளார்.

சமீபத்தில் ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்த நிலையில் சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டோடு தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் விடைபெறுவார் என நம்பப்படுகிறது.

அதனால் வெற்றியோடு இந்த சீசனை முடிக்க சென்னை அணி ஆர்வமாக இருக்கும். இந்நிலையில் தற்போது சென்னை அணி வீரர்களான ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை.. 16 வயதிற்குள் இதுவரை யாருமே செய்யாத சாதனை...!

இந்தியா - பிரேசில அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி.. விழாக்கோலம் ஆகும் கொல்கத்தா...

தோனி சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் அய்யர்.. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

ஜிம்பாவேவுக்கு எதிரான முதல் டி20.. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா அபார வெற்றி...

அடுத்த கட்டுரையில்
Show comments