வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (23:16 IST)

போர்ச்சுகல் கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்!

Roberto
போர்ச்சுகல் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரொபர்ட்டோ மார்டினஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்பந்து விளையாட்டின் சிறந்த நாடுகளில் ஒன்று போர்ச்சுகல். இந்த அணியின் நட்சத்திர வீரராகவும் உலகப் புகழ்பெற்ற வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருக்கிறார்.

சமீபத்தில், இவர் தலைமையிலான போர்ச்சுகல் அணி காலிறுதிப் போட்டியில், மொராக்கோவிடம் தோற்றது.

எனவே அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னான்டோ சாண்டோஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 


அதுமட்டுமின்றி, ரொனால்டோவுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரொபர்டோ மார்ட்டினஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.