ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 9 மார்ச் 2024 (08:30 IST)

டிராவிட் சொன்ன வார்த்தை ஆறுதலாக இருந்தது- அறிமுகப் போட்டி குறித்து தேவ்தத் படிக்கல் கருத்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மூன்று போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இன்று தரம்சாலாவில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த போட்டியில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் அறிமுகமானார். இந்நிலையில் நேற்று பேட் செய்த அவர் தன்னுடைய முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து தனது தேர்வை நியாயப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் அறிமுகமானது குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில் “இந்திய அணிக்காக விளையாட எப்போதும் தயாராக இருக்கவேண்டும் எனக் காத்திருந்தேன். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் போது அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன். பேட் செய்யும் போது ஆண்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸின் பந்துகள் ஸ்விங் ஆனதால் அதை எதிர்கொள்வது சவாலானதாக இருந்தது. ஆனால் இந்த பிட்ச்சில் முன்பே சில முறைகள் விளையாடி இருந்ததால் சமாளிக்க முடிந்தது.

அறிமுகப்போட்டியில் நமக்கு தெரிந்த மனிதர்கள் அருகில் இருந்தது நம்பிக்கையைக் கொடுத்தது. குறிப்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ’மகிழ்ச்சியாக விளையாடு” எனக் கூறியது ஆறுதலாக இருந்தது. அவுட் ஆகாமல் இன்று (நேற்று) முழுவதும் பேட் செய்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.