என் அத்தியாயம் முடியும் நேரமிது.. நன்றி நண்பர்களே! – டேவிட் வார்னர் ட்வீட்!

Written By Prasanth Karthick
Updated: புதன், 1 டிசம்பர் 2021 (13:13 IST)
ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணியில் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் டேவிட் வார்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நேற்று தொடங்கியது. இந்நிலையில் அனைத்து அணிகளும் அதிகபட்சம் 4 வீரர்களை கையிருப்பில் வைத்துக் கொண்டு மீத வீரர்களை விடுவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தனது அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னரை விடுவித்துள்ளது. கடந்த 2014 ம் ஆண்டு சன்ரைஸர்ஸ் அணியில் இணைந்த டேவிட் வார்னர் 2016ம் ஆண்டில் அணிக்கு கோப்பையை வென்று தந்தவர். மேலும் ஐபிஎல் அணியில் அதிகமான ரன்களை குவித்த வீரர்களில் ஒருவர்.

அணியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள வார்னர் “அத்தியாயம் முடிந்தது. அனைத்து ரசிகர்களுக்கும், சன்ரைசர்ஸ் அணிக்கும் இத்தனை ஆண்டுகளாக கொடுத்து வந்த ஆதரவுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

தோனி சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் அய்யர்.. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?

ஜிம்பாவேவுக்கு எதிரான முதல் டி20.. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா அபார வெற்றி...

ஸ்பெயின் வீரர் போட்ட ஒரே ஒரு கோல்.. ஆபாச நடிகை மியா கலீஃபாவுக்கு ரூ. 6.27 கோடி லாபம்..

வலி அதிகமா இருக்கு!.. காயம் ஆறுவது கடினம்!.. மெஸ்ஸி உருக்கம்....

கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு இத்தனை கோடியா? குவியும் பரிசுமழை...

அடுத்த கட்டுரையில்
Show comments