Daily Horoscope
✕

ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு… புத்தாண்டில் அறிவிப்பை வெளியிட்ட ஆஸி வீரர்!

Written By vinoth
Updated: திங்கள், 1 ஜனவரி 2024 (07:28 IST)
உலகக் கோப்பையை வெற்றிகரமாக வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி அடுத்து பாகிஸ்தானோடு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இந்த தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதாகும் வார்னர் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6931 ரன்களை 45 க்கும் மேல் சராசரியில் சேர்த்துள்ளார். அவர் 22 சர்வதேச சதங்களையும் சேர்த்துள்ளார்.

ஓய்வு பற்றி அறிவித்துள்ள வார்னர் “2025 ஆம் ஆண்டு நடக்க உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு நான் தேவைப்பட்டால் அணிக்கு திரும்புவேன்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

சாஃப் சாம்பியன்ஷிப்: மாலத்தீவு போட்டிக்கு முன்பாக இந்திய அணியில் 6 புதிய வீரர்கள் இணைப்பு!

லியோனல் மெஸ்ஸி வரலாற்றில் வரலாற்று சாதனை: தொடர்ச்சியாக 'கோல்டன் பூட்' வென்று வரலாற்று சாதனை..

ஆசிய கோப்பை U19: பாகிஸ்தான் வெற்றி; ஹம்சா ஜஹூர் அதிரடி சதத்தால் அசத்தல்!

இன்று தீபாவளி தினத்தில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி.. சேவாக், டிராவிட மகன்கள் பங்கேற்பு...

டெல்லியில் நடக்க இருந்த கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்திற்கு மாற்றம்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments