தோனி தொடர்ந்து விளையாடுவார்… சி எஸ் கே CEO அளித்த அப்டேட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள கேப்டன் தோனி உள்பட ஐந்து முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த அணிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களான பென் ஸ்டோக்ஸ், தீபக் சஹார், சிசான்டா மஹால்ல, சிமர்ஜீத் ஆகிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது தோனிகும் காயம் ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது .
இதுபற்றி பேசியுள்ள சி எஸ் கே அணியின் CEO காசி விஸ்வநாதன் அளித்துள்ள அப்டேட்டின் படி, “தோனிக்கு முழங்காலில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவார். பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.