திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (21:44 IST)

கருப்பு ஏலியன் போல் தோற்றமளிக்கும் மனிதர்!

ஏலியன் போன்று தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக அந்தோணி லோப்ரெடோ என்பவர் ரூ.25லட்சம் செலவு செய்து தன்னை கருப்பு ஏலியனாக மாற்றியுள்ளார்.

இந்த உலகில் அனைவரும் மற்றவர்களிடமிருந்து தனித்துவமாகத் தெரிய வேண்டுமென்று நினைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். சிலர், படிப்பு, சிலர், விளையாட்டு, சினிமா,  இப்படி பல வகைகள் இருந்தாலும், உடல் ரீதியாக மனிதனாகப் பிறந்தாலும் இதிலிருந்து வித்தியாசமாகக் காட்சியளிக்க வேண்டுமென்று  அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு தங்களை அழகாக மாற்றிக் கொள்வர். ஆனால் மனிதர்களிடமிருந்து வித்தியாசமாக தோன்றற வேண்டுமென்று நினைப்பவர்களும் உள்ளனர்.

அந்த வகையில், அமெரிக்காவில், ஏலியன் போன்று தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக அந்தோணி லோப்ரெடோ தன்னை கருப்பு ஏலியனாக மாற்றியுள்ளார்.

இதில், உடலை அறுவைச் செய்த அந்தோனி, காது, மூக்கு துவாரப்பகுதிகளை அறுவைச் சிகிச்சையில்  அகற்றியுள்ளார். அதேபோல் மேல் உதட்டையும் நீக்கி, தன் கண்களின் விழித்திரையை மாற்றியுள்ளார்.

தன் உடலின் பல பாகங்களை மாற்றியதற்காக அவர் ரூ. 24 லட்சம் செலவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.