1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜூன் 2018 (18:51 IST)

தடைக்கு பின் நான்கு நாட்கள் தொடர்ந்து அழுதேன்- ஸ்டீவ் ஸ்மித்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு விளையாட தடை பெற்ற பின் நான்கு நாட்கள் தொடர்ந்து அழுதேன் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித்தின் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதம் விளையாட தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.
 
இதன்பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இவர்களுக்கு உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாட அனுமதி அளித்தது. இதையடுத்து, ஸ்மித் கனடாவில் நடைபெறும் ஒரு உள்ளூர் போட்டியில் விளையாட உள்ளார்.
 
இந்நிலையில் ஸ்மித் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
 
“ உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் மனதளவில் மிகவும் போராடி கொண்டிருத்தேன். தடை பெற்ற பின் நான்கு நாட்களாக கண்ணீரில் என் நாட்களை கழித்தேன். ஆனால், நான் மிகவும் அதிர்ஷடசாலி எனது நண்பர்கள் மற்றும் எனது குடும்பத்தினர் எனது கவலையை மறக்க வைக்க தினமும் என்னுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
 
என் வாழ்நாளில் இது போன்ற கடினமான சூழ்நிலையை நான் சந்தித்தது இல்லை. நான் தடைபெற்று விளையாடமல் இருந்த நாட்கள் எனக்கு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.