Daily Horoscope
✕

பாலியல் வழக்கில் சிக்கிய பாபர் ஆசம்…. வழக்கு தொடர நீதிபதிகள் உத்தரவு!

Updated: சனி, 20 மார்ச் 2021 (13:37 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் மீது வழக்கு தொடர சொல்லி நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பாபர் ஆஸம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதலபாதாளத்தில் இருக்கும் அணியின் நிலைமையை அவர் மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இப்போது தன் தலைமையில் பாகிஸ்தான் அணியை அவர் நியுசிலாந்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் மீது ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ளார். பள்ளியில் இருந்தே இருவரும் ஒன்றாக படித்ததாகவும் பாபர் கிரிக்கெட் வீரராக ஆவதற்கு முன்பே அவரை தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். 2010 ஆம் ஆண்டு பாபர் காதலை வெளிப்படுத்தியதாகவும், தன்னிடம் உடலுறவு கொண்டு தான் கர்ப்பமானது தெரிந்ததும் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாபர் ஆசமின் கேப்டன் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் அந்த பெண் புகார் கொடுத்து எப் ஐ ஏ என்ற அமைப்பு பாபர் ஆசமை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியது. ஆனால் அவருக்கு பதிலாக அவரது சகோதரரே ஆஜரானார். இந்நிலையில் இப்போது பாபர் ஆசம் மீது வழக்கு தொடர வலியுறுத்தி லாகூர் நீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது.
 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்