இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிடல்ஸ். அதனால் இந்த ஆண்டு அந்த அணியில் புணரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்தான் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் தக்கவைக்கப் படாமல் விடுவிக்கப்பட்டார்.
இப்போது ஏலத்தில் அவர் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் ரிஷப் பண்ட் பற்றி பகிர்ந்துள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.
அதில் “நாங்கள் டெல்லி அணி கேப்டனாக அவர் சில விஷயங்களை செய்யவேண்டும் என விரும்பினோம். ஆனால் அது நடக்காததால் அவரிடம் ஆலோசித்தோம். ஆனால் அவர் டெல்லி அணியை விட்டு விலகும் முடிவை எடுத்தார். அவர் எங்கு செல்ல வேண்டும் என நினைக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் இந்திய கேப்டன் ஆகவேண்டுமென்ற அவருடையக் கனவை தெளிவாக சொன்னார். அது ஐபிஎல் கேப்டனாக ஆவதில் இருந்துதான் தொடங்குகிறது” எனக் கூறியுள்ளார்.