செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 13 நவம்பர் 2022 (09:03 IST)

ஐசிசி யின் அதிகாரமிக்க பணியில் ஜெய் ஷா நியமணம்!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக தொடர்ந்து வருகிறார் ஜெய் ஷா.

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ உள்ளது. பிசிசிஐ நடத்தும் லீக் போட்டியான ஐபிஎல் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வருவாயாக வருகின்றன. இந்நிலையில் இதன் செயலாளராக இருந்த ஜெய் ஷா, மீண்டும் ஒரு முறை அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக பிசிசிஐயின் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்தனர்.

இப்போது பிசிசிஐ யின் செயலாளராக இருந்துவரும் ஜெய் ஷா ஐசிசி யின் ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் FFCA தலைவராக அவர் நியமனம் செய்யபப்ட்டுள்ளார். இந்த நியமன பதவி ஐசிசியின் சக்தி வாய்ந்த பதவிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.