1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 14 ஏப்ரல் 2025 (12:47 IST)

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அந்த அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் போட்டிகளில் தோற்று  புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இதனால் ரசிகர்களே சிஎஸ்கேவை விமர்சித்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மொத்தமாக இந்த தொடரிலிருந்து விலகுகிறார். இனி வரும் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்பதால், மீண்டும் தோனியை சிஎஸ்கேவின் கேப்டனாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் ருத்துராஜுக்கு பதில் சிஎஸ்கே அணியில் இணையப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இப்போது ஆயுஷ் மாத்ரே என்ற 17 வயது  மும்பையைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரரை வாங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மெஹா ஏலத்தில் அவர் 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக தனக்கு நிர்ணயித்திருந்தார். அப்போது அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவரைதான் சி எஸ் கெ அணி வாங்கவுள்ள்தாக சொல்லப்படுகிறது.