செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 2 ஜனவரி 2025 (07:56 IST)

சிட்னி டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸி அணி முன்னிலை வகிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு கடைசி போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது என்பதால். நாளைத் தொடங்கவுள்ள போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையில் மெல்போர்னில் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஒரு டி 20 போன்ற பரபரப்புடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. இந்த தோல்வியால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வது கிட்டத்தட்ட கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் சிட்னி டெஸ்ட்டுக்கான ஆஸி அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக வெப்ஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸி அணி விவரம்
சாம் கோன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷான், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்,  நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.