Daily Horoscope
✕

சர்சையால் பதவி விலகினார் டேரன் லிமேன்

Updated: வெள்ளி, 30 மார்ச் 2018 (15:38 IST)
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லிமேன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய  அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஸ்டீவன் ஸ்மித்தும் இந்த விவகாரத்தை  ஒப்புக் கொண்டார். 
 
இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை, கேப்டன் பதவி ஏற்க இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. மேலும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் விளையாட தடை விதித்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லிமேன் தனது பயிற்சியாளர் பதிவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர் மீது ஆஸ்திரேலியா அணி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அறிவித்திருந்து. ஆனாலும், அவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எல்லாம் காட்டு

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

352 ரன்கள் என்ற இலக்கை எட்டி சாதனை செய்த மே.இ.தீவுகள்.. தொடரை வென்றது இந்தியா...

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது போட்டி.. பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் விலகல்.. மாற்று வீரர்கள் யார் யார்?

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அட்டவணை.. இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியின் நாள்..

அடுத்த கட்டுரையில்
Show comments