திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 ஜூலை 2018 (17:32 IST)

விராட் கோலி சதம் அடித்துவிடுவாரா? சாவல் விடும் ஆஸ்திரேலியா பவுலர்!

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் உள்ளது. அந்த அணியுடன் எஞ்சியிருக்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை விளையாட உள்ளது. அதன் பிறகு இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது. 
 
ஆஸ்திரேலியா சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணிக்கு இது சரியான தருணமாகும்.
 
இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டி குறித்து ஆஸ்திரேலிய பவுலர் பாட் கம்மின்ஸ் பின்வருமாரி பேசியுள்ளார். அவர் கூறியது, என்னுடைய துணிச்சலான, வீரமான கணிப்பு என்னவென்றால், ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டித் தொடர் விளையாட வரும் இந்திய அணியை வீழ்த்துவோம். அந்த அணியின் கேப்டன் விராட் கோலியை சதம் கூட அடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.