1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 7 அக்டோபர் 2023 (16:29 IST)

AsianGames2023- ஆடவர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா

cricket  india
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்   நடந்து வரும் நிலையில், இன்றைய போட்டியில், ஆடவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா.

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட  நாடுகள் பங்கேற்றுள்ளன.

இப்போட்டிகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, சீனா நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பல போட்டிகளில் தங்கம்., வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக கிரிக்கெட்  போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று  இறுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்ந்து  இந்தியா விளையாடியது.

இப்போட்டியில்  இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. எனவே 18.2 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 112 / ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டத்து.

பின்னர் மழை நிற்காததால் போட்டி ரத்தானது. புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில்  இந்திய அணி வென்றதாக அறிவிக்ககப்பட்டது.

இந்திய, ஹாக்கி அணி, இந்திய மகளிர் அணி தங்கம் வென்ற நிலையில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றுதுள்ளது. இதுவரை 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.