இன்று ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி… இலங்கை vs பாகிஸ்தான் பலப்பரிட்சை!
ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று நடக்க உள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கியது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது. இதையடுத்து சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதையடுத்து இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாய் மைதானத்தில் நடக்க உள்ளது. ஏற்கனவே நடந்த ஆசியக் கோப்பைகளில் இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.