உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கலக்கிய அஸ்வின்… எத்தனை விக்கெட்கள் தெரியுமா?
நடந்து முடிந்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக அஸ்வின் உள்ளார்.
இரண்டரை ஆண்டுகளாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவை தோற்கடித்து நியுசிலாந்து கைப்பற்றியுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், இந்தியாவின் அஸ்வின் இத்தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி கலக்கியுள்ளார் என்பது ஆறுதலை தந்துள்ளது.
அவர் இந்த தொடரில் 71 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸியின் பாட் கம்மின்ஸ் உள்ளார்.