Daily Horoscope
✕

தோனியைப் புகழ்ந்து ரோஹித் & டிராவிட்டுக்கு மறைமுகமாக பதில் சொன்ன அஸ்வின்!

Written By vinoth
Updated: வெள்ளி, 23 ஜூன் 2023 (11:28 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இறுதிப் போட்டியில் இழந்துள்ளது.

இதுபற்றி முன்னர் பேசிய அஸ்வின் “2018-19 முதல், எனது வெளிநாட்டு பந்துவீச்சு அற்புதமாக இருந்தது, மேலும் நான் அணிக்காக கேம்களை வெல்ல முடிந்தது.  போட்டி தொடங்கும் 48 மணி நேரத்திற்கு முன்பே நான் அணியில் இருக்க மாட்டேன் என்பது எனக்கு தெரியவந்தது.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “தோனியின் கேப்டன்சி பற்றி நாம் அனைவரும் பேசுகிறோம். அவர் என்ன செய்தார். எதையுமே எளிமையாக செய்தார். ஒரு அணியை தேர்வு செய்தார் என்றால் ஆண்டு முழுவதும் அதே அணியை விளையாட வைத்தார். இதனால் வீரர்கள் அவர் தலைமையில் பாதுகாப்புணர்வை உணர்ந்தார்கள். இது ஒரு வீரருக்கு மிக முக்கியம்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments