1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 ஜூன் 2023 (07:52 IST)

சிவகார்த்திகேயனின் மாவீரன் ஆடியோ வெளியீடு எப்போது? வெளியான தகவல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அருண் விஷவா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்துள்ள நிலையில் இப்போது ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. படம் ஜுலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுவரை படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் படத்தின் ஆடியோ வெள்யீட்டு விழா ஜூலை 2 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.