1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 2 அக்டோபர் 2024 (14:33 IST)

50 ஓவர்களில் 400 ரன்கள் குவிப்போம் என்றார் ரோஹித்… அஸ்வின் பகிர்ந்த தகவல்!

இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடந்த நிலையில் இந்த போட்டியில் இரண்டரை நாட்களுக்கு மேல் மழையால் பாதிக்கப்பட்டது. ஆனாலும் இந்திய அணி மிகச்சிறப்பாக . இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது, இதனை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டம் இரண்டு செஷன் மட்டுமே நடந்தது. அதன் பின்னர் தொடர் மழை பெய்ததால் நான்காம் நாள்தான் ஆட்டம் தொடங்கியது. இதனால் எப்படியும் போட்டி டிராதான் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷை ஆல் அவுட் ஆக்கி, அவர்கள் நிர்ணயித்த 95 ரன்கள் இலக்கை எட்டியது.

இந்த தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்றார் அஸ்வின். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட்டை வென்றது குறித்து பேசிய அவர் “வங்கதேச அணி ஆல் அவுட் ஆனதும், ரோஹித் அணி வீரர்களோடு ஒரு சிறிய மீட்டிங் போட்டார். அப்போது அவர் 50 ஓவர்களில் 400 ரன்கள் சேர்ப்போம். இது நடக்காமல் கூட போகலாம். நாம் 200 ரன்களுக்குள் ஆட்டமிழந்தாலும், இந்த போட்டியில் நம்மால் முடிவைக் கொண்டு வரமுடியும். சொன்னது மட்டுமில்லாமல் பேட் செய்ய சென்றதும் முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பினார். அவர் அதிரடியில் புகுந்ததால் மற்றவீரர்களும் அதையே பின் தொடர்ந்தார்கள்.” எனக் கூறியுள்ளார்.