டெஸ்ட் அணிக்குக் கேப்டனாக செயல்பட அஸ்வின் தகுந்த நபர்… பாக் வீரர் பாராட்டு!
சமீபத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கி ஆட்டநாயகன் விருதை பெற்றார் அஸ்வின் இதுவரை 18 ஆட்டநாயகன் விருதையும் பெற்றுள்ளார்.
இன்னும் ஒரே ஒரு ஆட்டநாயகன் விருதை அவர் பெற்றுவிட்டால் சச்சினுக்கு இணையாக 19 ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை விரைவில் அவர் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா “அஸ்வின் இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமையேற்று வழிநடத்த பொருத்தமான நபர். சமீபத்தில் அவர் அடித்டஹ் 42 ரன்கள் ஒரு சதத்துக்கு நிகரானது. இதுபோல நெருக்கடியான பல போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.