மும்பை வீரர் அர்ஜுன் டெண்டுல்கரை நாய் கடித்து காயம்!
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான 20 லட்சத்துக்கே ஏலம் எடுத்தது. ஆனால் கடந்த சீசன் முழுவதும் அவரை விளையாட வைகக்வே இல்லை. இந்நிலையில் இந்த சீசனில் சில போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் எந்த போட்டியிலும் அவர் முழுமையாக 4 ஓவர்கள் பந்துவீசவே இல்லை.
இதனால் சில போட்டிகளுக்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அவரின் இடதுகையில் நாய் கடித்து காயமேற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அவரால் வலைப்பயிற்சியில் கூட ஈடுபட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.