வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 22 ஜூலை 2024 (11:23 IST)

“ஹர்திக் திறமையான வீரர்தான்… ஆனால்?” – தேர்வுக்குழு தலைவர் அகார்கர் விளக்கம்!

உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இனி இந்திய அணிக்குக் கேப்டன் பொறுப்புக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா ஏன் கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்பது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் பேசியுள்ளார். அதில் “ஹர்திக் பாண்ட்யா அணிக்கு முக்கியமான வீரர்தான். அவர் திறமையான வீரராக இருந்த போதும் அவரின் பிட்னெஸ் சவாலளிக்கக் கூடியதாகவே உள்ளது.  எல்லா நேரத்திலும் விளையாட தகுதி வாய்ந்த கேப்டன்தான் இந்திய அணிக்குத் தேவை” என அவர் கூறியுள்ளார்.