செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 ஜூன் 2018 (11:51 IST)

வங்காளதேசத்துடன் முதல் டி20 போட்டி: 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி

வங்காளதேச அணிக்கு எதிராக நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி  45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி பவுலிங்கை தேர்வு செய்தது. 
 
அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 வீக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக முகமது ஷஹ்சாத் 40 ரன்களும், சாமிமுல்லா ஷேவாரி 36 ரன்களும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் அபுல் ஹசன் மற்றும் முகமதுல்லா தலா 2 வீக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 19 ஓவர்களில் அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்து வெறும் 122 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அதிகப்பட்சமாக லிட்டான் தாஸ் 30 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.