திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 26 மே 2023 (12:04 IST)

இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி.. புகைப்படத்தை வெளியிட்ட பிசிசிஐ!

இந்திய அணி விரைவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சர் ஜெர்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜெர்ஸியை அடிடாஸ் நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்துள்ளது.

2028 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்கான ஜெர்ஸிக்களை அடிடாஸ் நிறுவனம் வடிவமைத்துத் தரும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய பயிற்சிக்கான ஜெர்ஸியை அணிந்து இந்திய வீரர்களும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.