ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் பதிவு..
வருகிற 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
பிசிசிஐ கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தி வருகிறது. இதில் பஞ்சாப், சென்னை, டெல்லி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று வருகின்றனர்.
இதில் வீரர்கள் சிலரை ஒவ்வொறு ஆண்டும் வெவ்வேறு அணிகள் வாங்குவார்கள், அல்லது வெளியேறுவார்கள். இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஏலத்தில் பங்கேற்பதற்காக 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் வீரர்களின் அடிப்படை ஏலத்தொகை குறைந்தபட்சம் 10 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டார்க் ஐ.பி.எல்.போட்டிகளில் விளையாடவில்லை என்று தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.