திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 6 நவம்பர் 2018 (15:12 IST)

2.0 டிரைலரை ஜீரோவாக்கிய ஷாருக்கானின் ஜீரோ டிரைலர்

ஷாருக்கானின் ஜீரோ திரைப்படத்தின் டிரைலர் ரஜினியின் 2.0 டிரைலரின் சாதனையை அசால்ட்டாக முறியடித்துள்ளது.
 
2.0 ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அக்‌ஷய்குமார் ஏமி ஜாக்சன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 2.0  படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
 
சமீபத்தில் 2.0 படத்தின்  டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாவில் பிரமாண்டமாக நடைபெற்றது.
 
இப்படத்திற்கு 600 கோடி ரூபாய் செலவாகி இருப்பதாக ரஜினி கூறியிருந்தார். இதற்கு முக்கிய காரணம் படம் ரெடியாகி பல வருடங்கள் ஆகியும் கிராபிக்ஸ் பணிகள் முடியாததே.
 
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட 2.0வின் டிரைலர், போதிய வரவேற்பு பெறவில்லை என தெரிகிறது. தமிழில் சர்கார் டீசர் ஏற்படுத்திய சாதனையை 2.O பட டீசரால் முந்த முடியவில்லை என தெரிகிறது.
 
இது ஒருபுறம் இருக்க ஹிந்தியில் ஷாருக்கான் நடித்துள்ள ஜீரோ திரைப்படத்தின் டிரைலர் இரு நாட்களுக்கு முன்பு வெளியானது. ஜீரோ டிரைலர் 2.0 வின் டிரைலரை விட பலமடங்கு பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
 
இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதேவேலையில் படத்தின் டிரைலருக்கே இந்த லட்சனம் என்றால் படத்திற்கு எப்படி வரவேற்பு இருக்கப்போகிறது என படக்குழுவினர் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.