திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 நவம்பர் 2018 (09:00 IST)

ரூ.20 லட்சம் ஹவாலா பணத்தை மறைக்க முயன்ற காவலர்கள் சஸ்பெண்ட்

குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய காவலர்களில் ஒருசிலர் குற்றவாளிகளுக்கே உடந்தையாகி விடும் அதிர்ச்சி செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் கடலூர் அருகே பிடிபட்ட ஹவாலா பணத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு வராமல் மறைக்க முயன்ற மூன்று காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று கடலூரில் மூன்று காவலர்கள் வாகன சோதனை செய்த போது ரூ. 20 லட்சம் ஹவாலா பணம் சிக்கியுள்ளது. உடனடியாக அந்த ஹவாலா பணத்தை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து, அந்த பணத்தை கொண்டு வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், அந்த பணத்தை மறைக்க முயன்றுள்ளனர்.

ஆனால் ஒருசில நிமிடங்களில் விஷயம் அம்பலமானதால் மாவட்ட எஸ்.பி ஹவாலா பணத்தை மறைத்த காவலர்கள் ரவிக்குமார், செல்வராஜ், அந்தோணி ஆகிய மூவரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.