1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (10:07 IST)

ஹேப்பி 6 Months: மகளுடன் கொஞ்சி விளையாடும் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்‌டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில்  பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு வமிகா என மூன்றெழுதில் முத்தான பெயரிட்டுள்ளனர். பிறந்து 6 மாதங்களான நிலையில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அனுஷ்கா.  "அவளுடைய ஒரு புன்னகையால் நம் உலகம் முழுவதையும் மாற்ற முடியும்! நீங்கள் எங்களைப் பார்க்கும் அன்பிற்கு ஏற்ப நாங்கள் இருவரும் வாழ முடியும் என்று நம்புகிறேன். எங்களின் மகிழ்ச்சியான 6வது மாதம் என கூறி விராட் கோலி குழந்தையை கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.