1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (14:50 IST)

சீக்கிரமே நல்ல சேதி சொல்றேன்... திருமணம் குறித்து தமன்னாவின் காதலர் பதில்!

தமன்னா தமிழ் சினிமாவில் கேடி படம் மூலம் அறிமுகம் ஆனாலும், அயன் படத்தின் வெற்றிதான் அவரை கமர்ஷிய நாயகியாக்கியது. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 
 
ஆனால் இப்போது அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. பாலிவுட்டில் முகாமிட்டுள்ள அவர் அண்மைக்காலமாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் ஒரு பார்ட்டியில் தமன்னா, அவருக்கு முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
 
ஆனால், அவரை காதலிக்க வில்லை என அப்பட்டமாக பொய் கூறி எஸ்கேப்  ஆனார். அதன் பின்  மீண்டும் விஜய் வர்மாவுடன் டின்னர் டேட்டிங் சென்ற வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. 
 
இந்நிலையில் தற்போது  அபுதாபியில் நடைபெற்ற IIFA விருது விழாவில் நடிகர் விஜய் வர்மாவிடம் பத்திரிகையாளர்கள், ஏதாவது சந்தோஷமான நல்ல செய்தி இருக்கா? என தம்மனாவுடனான திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் 'சீக்கிரமே நல்ல படத்தை கொடுக்க முயற்சிக்கிறேன்' என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.