திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth

விஜய் 68 படம் வாரிசு படத்தின் பட்டி டிங்கரிங் வெர்ஷனா?... லேட்டஸ்ட் தகவல்!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் படத்தில் மன்னா கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தமன்னா விஜய்யோடு சுறா என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் கதைக்களம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த படம் ஒரு அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல்கள் பற்றிய கதை என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இதுபோன்ற கதையான வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.