திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth

வெங்கட்பிரபு சம்பளத்தை பாதியாக குறைத்த ஏஜிஎஸ் நிறுவனம்!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் முடியும் முன்பே விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்காக விஜய் இதுவரை வாங்காத சம்பளத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு அவர் கேட்ட சம்பளத்தில் பாதியைதான் கொடுக்க சம்மதித்துள்ளதாம் ஏஜிஎஸ் நிறுவனம். இந்த படத்துக்கு வெங்கட் பிரபு 20 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், ஆனால் கஸ்டடி படம் நஷ்டமானதை காரணம் காட்டி 10 கோடி ரூபாய் சம்பளம் என இறுதி செய்துள்ளதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.