புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By sinoj
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (21:33 IST)

எனக்கு அந்த அநியாயம் செய்தனர் ! பிரபல நடிகை வேதனை

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய சினிமாவில் முன்னணி நடிகையான தமன்னா தனக்கு விருது கொடுப்பதில் அநியாயம் நடந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சுஷாந்த் சிங்கின் தற்கொலை சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து வாரிசு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நொபோடிசம் பாலிவுட்ட்டில் நடப்பாக பலரும் கூறியநிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தன் வாய்ப்புகளை கெடுக்க ஒரு கும்பல் செயல்பட்டு வருவாதாக கூறினார். இப்போது ரசூல் பூக்குட்டியும் பாலிவுட் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
 

இந்நிலையில், நடிகை தமன்னா, விருதுகள் கொடுப்பதில் எனக்கு பலமுறை பாரபட்சமும் அநியாயமும் நடந்துள்ளது. விருதுக்கு என் பெயர் பரிந்துரைக்கப்பட்டும் எனக்கு விருது கிடைக்கவில்லை; ஆனால் ரசிகர்களின் ஆதரவே முக்கியம்.அதனால் நடிகர் நடிகைகளை ஒதுக்கமுடியாது ரசிகர்களைவிட விருது பெரியது கிடையாது என தெரிவித்துள்ளார்.