புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj

நடன கலைஞர்களுக்கு உதவிய பிரபல ’’டான்ஸ் ‘’நடிகர்....

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரொனா தொற்றினால்  அனைத்து நாடுகளும் பெரும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் பதிமூன்று லட்சம் மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் 31 ஆம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்தியாவிலேயே அதிகளவு கொரொனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில்,  அனைத்து தொழில்துறையினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமாப் பணியாளர்களுக்கு சினிமா நட்சத்திரங்களும், இயக்குநர்களும் உதவி செய்து வருகின்றனர்.

தற்போது நடிகர் ஹிருத்திக் ரோசன், வாழ்வாதாரம் இழந்து த்வித்து சொந்த ஊரில் இருத 100 சினிமா நடன கலைஞர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணந்து செலுத்தியுள்ளதாகவும் இதுகுறித்த மெசேஜ் அவர்களின் செல்போனுக்கு வந்த போது அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிரித்திக் ரோசன் நடனத்தில் வல்லவர் என்பது குறிப்பிடத்தகக்து.