செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (17:03 IST)

எளிய சைவ உணவு இதுதான் – பிரபல நடிகர் டுவீட்

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இறந்த  5 வது ஆண்டு தினம் இன்று நாடு முழுக்க அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில்  அப்துல் கலாமின் நண்பர்கள், அவருடன் பழகியவர்கள்,மாணவர்கள் உட்பட  பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக்கின்  டுவிட்டர் பக்கத்தில் ஒருவர்,

@Actor_Vivek சார் அப்துல்கலாம் ஐயா அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எதாவது இருந்தால் ஒன்றை கூறுங்கள்... அறிவியல் மற்றும் மாணவ , மாணவிகளிடம் உரையாடுவதை தவிர்த்து....!!! என்று கேட்டிருந்தார்.


அதற்கு பதிலளித்த நடிகர் விவேக், ஆன்மாவைத் தொடும் இசை, அறிவை வளர்க்கும் புத்தகம், அன்போடு பரிமாறப்படும் எளிய சைவ உணவு என்று சுவாரஸ்யமான பதிவிட்டிருந்தார். இதற்குப் பலரும் லைக்குகள் குவித்து வருகின்றனர்.