சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீதேவி சிலை - விமர்சனத்திற்குள்ளான புதிய பிரச்சனை!

Last Updated: புதன், 4 செப்டம்பர் 2019 (12:13 IST)
50 ஆண்டுகளாக திரைத்துறையில் ஜொலித்து வந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் , டோலிவுட் , என 5 மொழிகளிலும்  கலக்கினார் . இவர் 1996ம் ஆண்டு பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்களுக்கு தாயானார் . 


 
பல்வேறு மொழிகளுள் சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்து வந்தது இவர் கடந்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி மாரடைப்பாடல்  துபாய் ஹோட்டலில்  மரணமடைந்தார். அவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் தற்போது மாடமே துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஸ்ரீ தேவிக்கு மெழுகு சிலை அமைத்துள்ளார்கள். 


 
இந்த சிலையை நேற்று திறந்து வைத்தனர். இந்த விழாவில் அவரின் கணவர் போனி கபூர், மகள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் பங்கேற்று நினைவு நாளை கொண்டாடினார்கள். அப்போது குடும்பமாக ஸ்ரீதேவி சிலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் போனி கபூர். ஆனால் தற்போது இந்த சிலை பார்ப்பதற்கு மகள் ஜான்வி கபூர் உருவம் போலவே இருக்கிறது என்று கூறி விமர்சித்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :