புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By siva
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (15:08 IST)

நடிகை ஷில்பா ஷெட்டி குடும்பத்திற்கே கொரோனா: இன்ஸ்டாவில் தகவல்

நடிகை ஷில்பா ஷெட்டி குடும்பத்திற்கே கொரோனா
விஜய் நடித்த குஷி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவரும் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நாயகியாக நடித்தவருமான நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
இதுகுறித்து ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் கூறியபோது ’எனது தாய் தந்தை கணவர் உள்பட உறவினர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா வைரஸ் விதிமுறைகளின்படியும், மருத்துவர்களின் அறிவுரைப்படியும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் குணமாகி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக எனக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தினர் விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர் ஷில்பா ஷெட்டியின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது