கேஜிஎஃப், பாகுபலி வசூலை முறியடித்த பதான்! – மாஸான ஷாரூக்கானின் கம்பேக்!
ஷாரூக்கான் நடித்து சமீபத்தில் வெளியான “பதான்” திரைப்படம் மிகப்பெரும் ஹிட் அடித்துள்ள நிலையில் 1000 கோடி வசூலில் விரைவில் இணைய உள்ளது.
ஷாரூக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்து சித்தார்த் ஆனந்த இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பதான். 4 ஆண்டுகள் கழித்து ஷாரூக்கான் நடிக்கும் படம் என்பதால் பொதுவாகவே இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியான பதான் தொடர் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் பதான் திரைப்படம் ரூ.901 கோடி வசூலித்துள்ளது. இந்த வாரத்தில் இது ஆயிரம் கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்குள் மட்டும் பதான் இதுவரை ரூ.558 கோடி வசூலித்துள்ளது. இது கேஜிஎஃப், பாகுபலி படங்கள் இந்தியாவில் வசூல் செய்ததை விட அதிகம் ஆகும்.
Edit by Prasanth.K