1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (09:45 IST)

டங்கல் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த பதான்… பாலிவுட் சினிமாவில் புதிய உச்சம்!

ஷாருக் கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

இதையடுத்து நடந்த படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷாருக் கான் பதான் தனக்கு சினிமாவில் மீண்டும் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளதாகக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இப்போது படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில் 729 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாம். இதன் மூலம் பாலிவுட்டில் அதிக வசூல் செய்த படம் என்ற அமீர்கானின் டங்கல் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.