பதான் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?- ஷாருக் கான் அளித்த பதில்!
ஷாருக் கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் திரைப்படம் ரிலீஸாகி 5 நாட்களில் மட்டும் 500 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இதையடுத்து நடந்த படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷாருக் கான் பதான் தனக்கு சினிமாவில் மீண்டும் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும் இந்த நிகழ்வில் பதான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு ஷாருக் கான் “பதான் 2 உருவானால் அதில் நடிப்பதில் பெருமைப்படுவேன். என்ன கொஞ்சம் நீளமாக முடி வளர்க்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.